செய்வினை மருந்து

 


கடந்த 6 ஆண்டுகள் 
தமிழ் நாடு முழுவதும்
உள்ள 30க்கும் மேற்பட்ட
 ஜோதிடர்கள்,     
15 குறி சொல்லும் சாமியாடிகள்,
 10க்கும் மேற்பட்ட மாந்த்ரீகர்கள்,
 6 குடுகுடுப்பைகாரர்கள்,
 2 பிரபலமான மனோதத்துவ 
நிபுனர்கள்ஆகியோரை 
நேரிடையாக சந்தித்து              
பெறப்பட்ட தகவல்களின்                                                      
 அடிப்படையில்
 இந்த ப்ளாக்
 உருவாக்கப்பட்டுள்ளது.                 

          
2009ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம்
 பெங்களூரில் நடை பெற்ற 
அகில இந்திய மாற்று மருத்துவர்கள்
 மாநாட்டில்
uses and effects of indian toxical plants   என்ற தலைப்பிலும் , 2010 பிப்ரவரி 
மாதம் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக அறிவியல் பேரவை கூட்டத்தில்
   மந்திரமா மருத்துவமா என்ற தலைப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட 
 எனது ஆய்வு  கட்டுரைகளின் அடிப்படையிலும் 
இந்த ப்ளாக்   உருவாக்கப்பட்டுள்ளது.   
                                          
எனது ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் 2011 தமிழ் புத்தாண்டு மலரில் அவள்                 விகடன் பத்திரிக்கையும்,2011 ஜனவரி 9ம் தேதி தினமலர் மற்றும் காலை கதிர்                                   பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்ட்ள்ளன .                                                                                            
                                                                                    Dr.G. முகுந்தன்.BMHS.DYNT,           






செய்வினை வசியம் என்பதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள். இது அத்தனையும் ஏமாற்று வேலை என்று சொல்வது மிகமிக முட்டாள்தனம். இவை அனைத்தும் மனித உடலின் ஆதார திரவங்களை பாதிக்க செய்யும் மருத்துவ உண்மைகள்.ஆனால் இத்தகைய எதிர்மறை விளைவுகள் அனத்தும் மந்திரசக்தியலும், அமானுஷ்ய சக்தியாலும்,தெய்வ தன்மையாலும், செய்யப்படுவது என்பது மிகப்பெரிய கட்டுகதை.இந்த வித்தைகள் அனைத்தும் விஷதன்மை வாய்ந்த மூலிகைகளை 
உண்ண கொடுத்து ஏற்படுத்தப்படும் உடல் மற்றும் மனபாதிப்புகளே.
செய்வினை, வசியம், வைப்பு, இடுமருந்து என்றெல்லாம் 
சொல்லப்படும் இவை ஜோதிட பாஷையில் விஷபோஜனம் என்று 
சொல்லப்படுகிறது. விஷ போஜனம் என்ற வார்த்தைக்கு நச்சு உணவு 
என்று பொருள்.

இயற்கை தாவரங்களில் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருப்பதை போலவே நூற்றுக்கனக்கான விஷ மூலிகைகள் உள்ளன. அரளிவிதையை அரைத்து தின்றால் மரணம் ஏற்படும் என்பதும், ஊமத்தை விதையை உட்கொண்டால் மூளை பாதிப்புகள் ஏற்படும் என்பதும், கஞ்சாவும் அபினும் புத்தியை பேதலிக்க செய்யும் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மை இதை போலவே பல தவரங்களில் இருக்கும் நச்சுக்கள் உடல் மற்றும் மனஇயக்கத்தை கடுமையாக பாதிக்ககூடியவை

உதாரணமாக குன்றிமணியில் உள்ள ஆப்ரின், ஊமத்தைவிதியிலுள்ள ரைசின், கள்ளிமந்தாரையிலுள்ள தெவிற்றியா ஏ, பாப்பி செடியில் உள்ள மோர்ஃபின், காட்டு சிகையில் உள்ள குராரி, டெட்லி நைட் ஷேட் எனப்படும் நீல கதிரியில் இருக்கும் அட்ரோபின், காக்கை கொல்லியில் இருக்கும் பிக்ரோ டாக்ஸின், இண்டியன்  ஹெம்ப் எனப்படும் காட்டு கதிரியில் உள்ள ட்ரைக்ளிக் ஆஸிட், நீர் பாசியில் இருக்கும் ஆர்சனிக், போன்றவை மிக கடுமையான உடல் மற்றும் மன  பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.


செய்வினை வசியம் இடுமருந்து வைப்பவர்கள் இத்தகைய நச்சு தாவரங்கள் சிலவற்றை சேர்த்து  தயாரிக்கப்படும் மருந்துக்களை தாங்கள் குறிவைக்கும் நபர்களின் அன்றாட உணவுகளில் அவர்களுக்கு தெரியாமலேயே கலந்து கொடுத்துவிடுகின்றனர். உணவோடு கலந்து உட்கொள்ளப்படும் இந்த தாவர நச்சுக்கள் ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து நரம்பு மண்டலம் மூளை மற்றும் உடல் திரவங்களான ஹார்மோன்கள், பெப்டைட்டுகள், மற்றும் என்சைம்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி தீராத உடல் மற்றும் மனபாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மிக ரகசியமாக பின்பற்றப்படும் இவற்றின் தயரிப்பு முறைகள் வழிவழியாக பின் பற்றப்படுகின்றன.

பொதுவாக இத்தகைய தாவர நஞ்சுகள் உடல் திரவங்களை பாதிப்பதால் சாதாரண ஆங்கில மருத்துவ பரிசோதனைகளாலும் ஆய்வக சோதனைகளலும் உடல் பாதிப்புகளுக்கான காரணங்களை கண்டுபிடிக்க முடிவதில்லை.அதேபோல் இவ்வாறு தயாரிக்கப்படும் தாவர நச்சுக்கள் (சில இடங்களில் பூச்சிக்கள் மற்றும் உலோக களிம்புகளும் சேர்க்கப்படுகின்றன) அனத்தும் அதிக கான்ஸன்ட்ரேட்டட் ஆக தயாரிக்கப்படுவதால் மிக குறைவான அளவு உட்கொண்டாலே பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

மேலும் இத்தகைய தாவர நச்சுக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளும் எதிருறை உணவுகளில் இருந்தே சக்தியை எடுத்துக்கொள்வதால் நீண்டகாலம் அவற்றின் விஷதன்மை உட்லில் தங்கி இருக்கிறது. உதாரணமாக தோல் நோயால் பாதிக்கப்படிருப்பவர்கள் ஒரு நாள் கத்திரிக்காய் சாப்பிட்டாலும் தொடர்ந்து பல நாட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே அதை போல. பழைய உணவுகளிலுள்ள பாஸில்லாய் எனப்படும் பூஞ்சைகள் தாவர நச்சுக்களின் உயிர்தன்மையை பல நாட்களுக்கு அப்படியே வைத்திருக்கும். தட்டை பயிறு, கருவாடு,சில வகை மீன் உணவுகள், சேனை கிழங்கு, புளித்த உணவுகள் போன்றவை தாவர நச்சுக்களுக்கு கூடுதல் சக்தியை கொடுக்கும்.

செய்வினை இடுமருந்து போன்றவற்றால் பதிக்கப்படுபவர்களுக்கு நீண்ட நாட்களாக பாதிப்புகள் குறையாமல் இருக்க இதுதான் காரணமே தவிர
மருந்து வைப்பவரின் திறமையோ சக்தியோ காரணமல்ல இவை அனைத்தும் ஹெர்பல் டாக்ஸிகாலஜி எனப்படும் தாவர நச்சுக்களால் ஏற்படுத்தப்படும் ஸ்லோ பாய்ஸன் ரக பாதிப்புகள் தானே தவிர இதில்  மந்திரமோ அமானுஷ்யமோ தெய்வத்தன்மையோ எதுவும் இல்லை.
 எப்படி அரளிவிதையை உட்கொண்டாலும் கஞ்சா புகைத்தாலும் நம்புபவர்  நம்பாதவர் என அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ அதே போல  இத்தகையா விஷ மூலிகைகளால் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்புகள் ஏற்படும் இதில் நம்பிக்கைக்கோ கடவுள் பக்திக்கோ இடமில்லை.

உடல் மற்றும் மனபாதிப்புகளை ஏற்படுத்தும் தாவர நச்சுக்களை களஞ்சிக நஞ்சு, பாணிக்கம்ப நஞ்சு, களு நஞ்சு, சூலை நஞ்சு, பஞ்சவ நஞ்சு, குன்ம நஞ்சு, குதம்ப நஞ்சு, மண்டூக நஞ்சு என்று எட்டு விதமாக பாரம்பர்ய மூலிகை மருத்துவம் பிரித்துள்ளது. 

பொதுவாக தாவர நச்சுக்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை அவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளை கொண்டு அவர்களின் உடலில் எத்தகைய நச்சு தன்மை உள்ளது என்று அறிந்து கொள்ள முடியும்.

காரணமற்ற உடல் வலி, தொடர்ந்து மலசிக்கல் இருப்பது, வயிற்றில் எரிச்சல் அல்லது குத்தல், வயிற்றின் மேற்பகுதியில் கனமாக இருப்பது அல்லது தொட்ர்ந்து வயு தங்கி இருப்பது, தூக்கமின்மை, காரணமற்ற எடை இழப்பு, போனற பாதிப்புகள் களஞ்சிக நஞ்சு பஞ்சவ நஞ்சு குன்ம நஞ்சு ஆகிய நச்சு பாதிப்புகள் இருந்தால் ஏற்படும்.

உடல் முழுவதும் எரிச்சல் குறிப்பாக பாதங்களில் எரிச்சல் அல்லது குத்தல். வியர்வையில் புகை நற்றம், தோலில் வெடிப்புகள் தோன்றுவது, கண்களில் சாம்பல் பூத்திருப்பது,அதீத வியர்வை போன்றவை களுநஞ்சு, மற்றும் சூலை நஞ்சின் அடையாளங்கள்.

குதம்ப நஞ்சு அல்லது மண்டூக நஞ்சு ஆகியவற்றின் பாதிப்புகள் இருந்தால் உடலின் அமோனியா வடை அல்லது அழுகிய பழத்தின் வாடை இருக்கும். தோல் வெளுப்பாக மாறும், கைகால் நடுக்கம், தூக்கத்தில் உடல் துடிப்பது, விரல் நுனிகளில் வலி அல்லது குத்தல் இருக்கும்.

அதேபோல ஒவ்வொரு நஞ்சும் ஒவ்வொரு விதமான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் களஞ்சிக நஞ்சு என்பது தோல் நோய்களையும், பாணிக்கம்ப நஞ்சு என்பது வாத நோய்களையும், களுநஞ்சு என்பது விஷசுரம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளையும், 
சூலை நஞ்சு காரணமற்றவலிகள்,கட்டிகளையும், பஞ்சவ நஞ்சு ஈரல் நோய்கலையும், குன்ம நஞ்சு குடல் மற்றும் ஜீரண உறுப்புகள் தொடர்பான நோய்க்ளையும், குதம்ப நஞ்சு நரம்பு பாதிப்புகளையும், மண்டூக நஞ்சு மூளை பாதிப்புக்ளையும் ஏற்படுத்தும்.  

இதில் எந்த வகை நஞ்சாக இருந்தாலும் அவற்றின் நச்சு தன்மையை நீக்கும் நச்சு முறிவு மருந்துக்களை உட் கொள்ள வேண்டுமே தவிர ஆன்மீகம் ஜோதிட்ம் போன்ற மற்ற வழிகள் எதுவும் பயன் தராது. பெரும்பாலும் செய்வினை எடுப்பதாக சொல்பவர்கள் தேள்கொடுக்கு இலை, பெறுந்தும்பை எட்டிக்காய் ஆகியவற்றை அரைத்து கொடுத்து  வந்தி எடுக்க செய்வதுண்டு பல நாட்களாக உடலில் தங்கி இருக்கும் நச்சு தன்மையை ஒருநாள் வாந்தி எடுப்பதால் நீக்கி விடமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல தொக்கு எடுப்பது எனப்படும் குழல் வைத்து ஊதி எடுப்பதும் தற்காலிக திருப்தியே தவிர உடலின் நச்சு தன்மையை நீக்க முடியாது. 

இத்தகைய தற்காலிக தீர்வுகளால் உடலில் தங்கி இருக்கும் விஷத்தின் தாக்கம் சிறுநீரக பாதிப்புகள், கல்லீரல் குறைபாடுகள், பக்கவாதம், கைகால் செயலிழப்பு. மூளை பாதிப்புகள் போன்ற தீர்க்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

ரசாயன மருந்துக்களான அட்ரோப்பின். கார்ப்பகால், டிஜிட்டாஸிஸ், கோகெய்ன், அபின் போன்றவை மூளை செல்களையும் உடல் திரவங்களையும் பாதித்து மன நோய்களை உறுவாக்குவதை போலவே தாவர நச்சுக்களும் மூளை மற்றும் மன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 
இன்ஸோம்னியா எனப்படும் தூக்கமின்மை, மெலன் கோலியா எனப்படும் மன சோர்வு, நர்கோஸியா எனப்படும் அதீத தூக்கம் வருவது, சைகோஸிஸ் எனப்படும் தீவிர மன குழப்பம், யுனிபோலர் டிஸார்டர் எனப்படும் எப்போதும் மூட்அவுட்டாக இருப்பது, பைபோலர் டிஸ் ஆர்டர் என்ப்படும் வெறித்தனம், ஹலூஸினேஷன் எனப்படும் உருவிழி தோற்றம், ஷிட்ஸோப்ரினியா எனப்படும் மனதில் அமானுஷ்ய குரல்கள் கேட்பது, ஈரோடோமேனியா எனப்படும் தீவிர காதல் பைத்தியம், டெம்போரல் லோப் எபிலப்ஸி எனப்படும் திக்பிரம்மை ஆகியவை உடல் திரவங்கள் எனப்படும் ஹார்மோன் மற்றும் பெப்டைட்டுகளின் சரிவிகிதம் இன்மையால் ஏற்படுவது. முறையான மருத்துவத்தால் இந்த குறைகளை முழுமையாக நீக்கிவிட முடியும். இவை அனைத்தும் மருத்துவ பாதிப்புகளே தவிர அமானுஷ்யமோ தெய்வதன்மையோ இல்லை.

பொதுவாக நீண்ட காலமாக தீர்க்கமுடியாத உடல் கோளாறுகள் இருந்தாலோ வழக்கமான மருத்துவ பரிசோதனைகளால் காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய் பாதிப்புகள் இருந்தாலோஉடலின் நச்சு தன்மையை சோதித்துக்கொள்ளுவது நல்லது.

ஸ்வஷ்த்த பரீக்ஷா எனப்படும் உடல் திரவ சோதனை மூலம் உடலில் தங்கி இருக்கும் விஷ தன்மையை கண்டறிந்து நஷா நிவர்த்தி மற்றும் க்ருமீ மஸ்தகி மருந்துக்களை உட் கொள்வதால் உடல் பாதிப்புகளை முழுமையாக நீக்கி விடலாம். ம்ருதுக ஔஷதம் எனப்படும் முன் எச்சரிக்கை மருந்துக்கள் எந்த விதமான தவர நச்சுக்களாலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். 



மாந்த்ரீக ப்ரயோகங்கள் என்று சொல்லப்படும் செய்வினை வசியம் இடுமருந்து ஏவல் போன்ற எதிர்மறை ப்ரயோகங்கள் அனைத்தும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்திகள் என்று பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்திய ஆன்மீக அறிவியலில் தாந்த்ர யோகம் என்று சொல்லப்படும் தந்த்ர சாஸ்திரத்தில் ஷட் கர்மம் என்று சொல்லப்ப்டும் ஆறு வித்தைகளே இத்தகைய தாக்குதல் வித்தைகளாக சொல்லப்படுகின்றன..
ஆதிகாலத்தில் தங்கள் நாட்டு மக்களையும் மன்னரின் குடும்பத்தையும் பகைவர்களிடம் இருந்து காப்பாற்ற சூக்கும தாக்குதல்களுக்காக அந்த நாட்டு தாந்த்ர நிபுணர்களால் பயன் படுத்தப்பட்டு வந்த இந்த வித்தைகள் நாளடைவில் தனக்கு வேண்டாதவர்களுக்கு  தனக்கு கட்டுபடாதவர்களுக்கும் எதிராக பயன் படுத்தப்படுகிறது.

தாந்த்ர சாஸ்திரத்தின் ஷட்கர்மம் என்று சொல்லப்படும் மோஹனம், தம்பனம், வித்வேசனம்,பேதனம்,வசியம், மாரணம் எனப்படும் ஆறு அம்சங்களும் நவீன உளவியலோடு தொட்ர்புடையவை.

மோஹனம். முதல் நிலையான மோஹனம் என்பது கவர்ந்திழுப்பது. ஏதாவது ஒரு குறிப்பிட்ட மனிதர் அல்லது பொருளின் மீது முழு கவனத்தையும் செலுத்துமறு தூண்டுவது மோஹனம் என்பபடும்.
மோஹனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுயகட்டுபாடு இருக்காது. ஒரு குறிப்பிட்ட மனிதரின் உத்திரவுகளுக்கு முழுமையாக அவரின் மூளை கட்டுபடும். அவரின் உத்திரவுகளை தவிர்க்கவோ மறுக்கவோ மனதுணிவு இருக்காது. ஒரு மனிதர் அல்லது பொருள் மீது தீவிரமான ஆசையோ அல்லது செயலை திரும்ப திரும்ப செய்ய வேண்டும் என்ற தீவிர வேட்கையோ ஏற்படும்.  
மோஹனத்தால் பாதிக்கப்பட்டவர் அவர் விரும்பும் பொருள் இல்லாமல் இருக்கமாட்டார். அதை பெருவதற்காக எந்த முயற்சியையும் செய்ய தயாராக இருப்பார். விரும்பும் மனிதருக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார், அவரின் குரல், பார்வைக்கு அடங்கி போவார்.பெரும்பாலும் தீவிர மதுபழக்கம், சாமியார்களிடம் மிகுந்த ஈடுபாடுகொண்டிருப்பது போன்றவை மோஹனத்தால் ஏற்படகூடியவை. சைக்கி அடிக்.ஷன்  

பொஸசிவ்னஸ்.....அப்ஸஸிவ் கம்ப்ல்ஸிவ் டிஸ் ஆர்டர், கிலாரெம்பல்ட் சின்ட் ரோம்,டிப்ஸோ மேனியா போன்ற உளவியல் பாதிப்புகள் மோஹனத்தோடு தொடர்புடையவை. 
   
தம்பனம். அல்லது ஸ்தம்பனம்.
தம்பனம் என்பது ஒருவரை செயல் படாமல் தடுப்பதாகும். குறிப்பிட்ட மூலிகைகளை கொடுப்பதன் மூலம் ஒருவரின் சிந்திக்கும் திறனை குறைத்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் செய்வதே தம்பனம் என்று சொல்லப்படுகிறது.
தம்பனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எப்போதும் மன இறுக்கத்துடன் மூட் அவுட்டாகி ஒரே இடத்தில் அடைந்து கிடப்பதுண்டு. புதிய முயற்சிகள். முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், செயல் வேகம் போன்றவை இவர்களிடம் இருக்காது. அளவுக்கதிகமான சோம்பேறித்தனம் இருக்கும் எதிலும் ஈடுபாடும் விருப்பமும் இருக்காது.
பொதுவாக தம்பனத்திற்கு பயன் படுத்தப்படும் மருந்துக்கள் நினைவாற்றலை தற்காலிகமாக இழக்கசெய்து தன்னிலை மறக்க செய்யும்.
மெலன்கோலியா, யூனிபோலர் டிஸ் ஆர்டர், நார்கோஸியா. டெம்போரல் லோப் எபிலப்ஸி ஆகிய மன பாதிப்புகள் தம்பனத்தோடு தொடர்புடையது.


வித்வேசனம்.

வித்வேசனம் என்பது ஒருவரின் மன இயல்புகளை முழுமையாக மாற்றக்கூடியதாகும். வித்வேசனம் என்ற வார்த்தைக்கு பகை மூட்டல் என்று பொருள். சாதரணமாக இருப்பவரின் மனதில் தர்க்க சிந்தனையை ஏற்படுத்தி மோதல் போக்கை கடைபிடிக்க செய்து எல்லா உறவுகளிடமும் பகையை ஏற்படுத்துவது வித்வேசனம்.
வித்வேசனத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எப்போதும் பகைஉனர்வும் தாழ்வுமனப்பான்மையும் எல்லா விஷயங்களிலும் எதிர்மறை சிந்தனையும் இருக்கும்.எல்லோரிடமும் எல்லாவற்றிற்கும் சண்டை போடுபவர்களாகவும்,இருப்பார்கள். வித்வேசனத்திற்கான மூலிகைகளை கொடுத்துவிட்டு குறிப்பிட்ட மனிதரை பற்றிய எதிர்மறை சிந்தனையை பதிய செய்தால் பாதிக்கப்பட்டவர் தொடர்ச்சியான காரணமற்ற மோதல் போக்கை கடைபிடிப்பார்.

சைகோஸிஸ், பைபோலர் டிஸ் ஆர்டர், ஹிஸ்டீரியா, போன்றவை வித்வேசனத்தோடு தொடர்புடையவை.

வசியம்
மாந்ரீக ஷட்கர்மத்தில் அதிகம் பயன் படுத்தப்படும் வார்த்தை வசியம் என்பது.வசியம் என்பது ஒருவரின் மனதை முழுமையாக கட்டுபடுத்துவது. வசிய மருந்துக்கள் மனித மூளையின் சுய கட்டுபாட்டை இழக்கசெய்து ஒரே சிந்தனை திரும்பதிரும்ப ஏற்படும் வகையில் நிரந்தர மன பதிவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக ஆண் அல்லது பெண்களை தங்கள் பக்கம் ஈர்க்க வசியம் பயன்படுவதாக பலமான நம்பிக்கை நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு மூளையின் பதிவறைகளில் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துக்களை உண்ண
கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய எண்ணத்தை அவரின் ஆழ்மனதில் பதிய வைத்தால் திரும்ப திரும்ப அந்த எண்ணம் ஏற்பட்டு அவர் மீது தீவிரமான ஈடுபாடு தோன்றும். 

அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர், ஈரோடோ மேனியா, கண்டிஷனல் ரிஃப்ளக்ஸ், அகியவை வசியத்தோடு தொடர்புடைய பாதிப்புகள்.

பேதனம்
பேதனம் என்பது பேதலித்தல் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. இந்த வித்தையின் மூலம் மன நோய்களை ஏற்படுத்துவது, சித்தபிரமை ஏற்படுத்துவது சுய நினைவை இழக்க செய்வது போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படும். மூளையில் சுரக்கும் டோபோமின்  மனேமின் ஆக்ஸைட்,போன்ற திரவங்களில் சமசீரின்மையை உருவாக்கி அதனால் உளவியல் மாற்றங்களை ஏற்படுத்துவது இதன் அடிப்படை.

ஷிட்ஸோப்ரினியா, ஹலூஸினேஷன், ஹைபோகான்ட்ரியா, மல்டிபிள் பர்சனலிடி டிஸ் ஆர்டர், போண்ற மன நோய்கள் பேதனத்தோடு தொடர்புடையது.

மாரணம்
மாரணம் என்பது எதிர்பாராத மரணத்தை ஏற்படுத்துவது.

இந்த அனைத்து பாதிப்புகளையும் விஷதன்மை வாய்ந்த மூலிகைகளை உட் கொள்ள செய்வதன் மூலம் ஏற்படுத்த முடியும்.உதாரணமாக தத்தி கொட்டையிலுள்ள டிக்ளினிக் ஆசிட் உணவில் கலந்தால் ஈரல் வீக்கத்தை ஏற்படுத்தும்…….உள்ள தனிமங்கள் அட்ரினலில் சுரக்கும் க்ளூகோ கார்டிகாய்ட்ஸின் அளவை அதிகரிக்கும் இது மூளையில் சுரக்கும் GnRHன் அளவை தடைசெய்வதால் ஆண்களின் டெஸ்டோடிரான் அளவை குறைத்துவிடும். டெஸ்டோடிரான் குறைந்தால் தேவையற்ற எரிச்சல்,பதட்டம்,ஆத்திரம்,தோல்விமனப்பான்மை, மனைவிமீது அக்கறையின்மை போன்ற குணங்கள் ஏற்படும்.

செங்கழுநீர் நீர்மேல் நெருப்பு ஆகியவற்றிலுள்ள சிட்ரோ கிரைளிக் ஆசிட் மூளையிலுள்ள அமீக்தலாவை பாதிக்கும் தன்மைகொண்டது.
சிவாகை செம்பல்லி ஆகியவற்றிலுள்ள THCC (Tetrahy drocanna binol) என்ற பொருள் நரம்புசெல்களான நீயுரோ டிரான்ஸ்மிட்டர்களை பாதிக்க கூடியது இதனால் ஒரே எண்ணம்  கட்டுபடுத்த முடியாமல் திரும்ப திரும்ப ஏற்படும்.

நச்சு தாவரங்களில் ஆடை ஒட்டி,வெள்ளாடனை, கருஞ்செம்பை,முள்அலரி போன்றவற்ரில் இருக்கும் கார்சலிக் அமிலங்கள் பி6.பி12,ஃபாலேட் ஆக்ஸிட் ஆகியவற்றின் அளவவை குறைக்கும் இதனால் அதீத மன அழுத்தம் மனஇறுக்கம் ஏற்படும்.  

இவை அனைத்தும் தெரிந்தோ தெரியாமலோ விஷ தன்மை கொண்ட மூலிகைகளை உட்கொண்டால் மட்டும் நடக்குமே தவிர மந்திரங்கள்..... பூஜைகள்..... யாகங்கள்......அமானுஷ்ய சக்திகள் ஆகியவற்றால் கண்டிப்பாக செயல்படுத்த முடியாது.  

செய்வினை இடுமருந்து பாதிப்புகள் இருந்தால் தாமதிக்காமல் உடணடியாக அதற்கான முறிவு மருந்து உட்கொள்ள வேண்டும். காலம் கடத்துவது பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

விவரங்கள் மற்றும் சிகிச்சைக்கு

 ,


Comments